சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மறவமங்கலம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் காலியாக உள்ள ஊர்தி ஓட்டுநர் (MMU) பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

ஊர்தி ஓட்டுநர் 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,500

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் https://cdn.s3waas.gov.in/s31a5b1e4daae265b790965a275b53ae50/uploads/2025/04/2025042412.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம்/ மாவட்ட சுகாதார அலுவலர், மாவட்ட சுகாதார அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலக மேல் தளம், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம், சிவகங்கை 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.05.2025