சென்னை மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னை மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் இயங்கி வரும் ஒருங்கிணைந்த சேவை பெண்கள் உதவி மையத்தில் வழக்குப் பணியாளர்கள் (Case worker) பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

வழக்குப் பணியாளர்கள்

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி :

சமூகப் பணியில் இளங்கலைப் பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும். உளவியல் ஆலோசகர் அல்லது மேலாண்மை வளர்ச்சியில் ஒரு வருடம் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணியிடங்களுக்கு பெண் விண்ணப்பதாரர்கள் மட்டும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், 8-வது தளம், சிங்காரவேலர் மாளிகை, இராஜாஜி சாலை, சென்னை - 600001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.05.2025