தேனி மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தேனி மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தைத் திட்டத்தில் உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
உதவியாளர் – பெண் (Helper - Women)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 4,500
இரவுக் காவலர் - ஆண் (Night Watchman)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 4,500
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cdn.s3waas.gov.in/s39a96876e2f8f3dc4f3cf45f02c61c0c1/uploads/2025/04/2025042334.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக் கீழே கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
District Child Protection Officer, District Child Protection Office, District Block Level Officer Building – II, Collectorate campus, District Employment Office Upstairs, Theni - 625531
விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.05.2025