ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட சுகாதாரத் துறையின் கீழ் செயல்படும் சித்த மருத்துவத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 11 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

சித்தா மருத்துவ அலுவலர் (Ayush Doctor)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் BSMS படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 34,000 - 40,000

மருந்தாளுனர் (Dispenser)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

D.Pharm or Integrated Pharmacy படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 15,000 

சிகிச்சை உதவியாளர் (Therapeutic Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Nursing Therapist course படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

பல்நோக்குப் பணியாளர்கள் (Multipurpose Hospital Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://cdn.s3waas.gov.in/s32723d092b63885e0d7c260cc007e8b9d/uploads/2025/04/2025041167.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

நிர்வாக செயலாளர், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், பி – பிளாக், 3 வது தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், ராணிப்பேட்டை மாவட்டம் - 632403

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.04.2025