கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தில் காலியாக உள்ள மருந்தாளுனர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 

மாவட்ட மருந்தாளுனர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் Degree/ Diploma in Pharmacy படித்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம் : ரூ. 15,000

வயதுத் தகுதி : 01.03.2025 அன்று 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்கள் தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

துணை இயக்குனர் மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட நெஞ்சக நோய் மையம், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி வளாகம், ஆசாரிப்பள்ளம் – 629201, கன்னியாகுமரி மாவட்டம்