கோவை மாநகராட்சியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோவை மாநகராட்சி (Coimbatore Corporation) பொது சுகாதார பிரிவின் கீழ் செயல்படும் 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 3 நகர சுகாதார ஆய்வகங்களில் காலியாக உள்ள செவிலியர், லேப் டெக்னீசியன், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 38 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

நகர சுகாதார செவிலியர்கள் (Urban Health Nurse)

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி :

Auxiliary Nurse Midwife Course அல்லது Diploma in General Nursing and Midwife Course (DGNM) அல்லது BSC Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 14,000

செவிலியர் பணியாளர்கள் (Staff Nurse) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

Diploma in General Nursing and Midwifery (DGNM) or B.Sc., Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 18,000

மருந்தாளுநர்கள் (Pharmacist)

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி :

Diploma in Pharmacy அல்லது B.Pharm படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 15,000

நுண்ணுயிரியலாளர் (Microbiologist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

MSc. Medical Microbiology அல்லது Medical Graduate (MBBS) with Post Graduate Degree, Diploma (Preferably in Microbiology, Virology, Pathology and Other Lab science) படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் 35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 25,000 – 40,000

ஆய்வக நுட்புநர் (Lab Technician)

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

Diploma in Medical Laboratory Technician படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 13,000

பல்நோக்கு மருத்துவப் பணியாளர் (Multipurpose Health Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை: 3

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

35 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 8,500

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க – https://ccmc.gov.in/img/upload/healthDepJob_2025.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

மாநகர நல அலுவலர், பொது சுகாதாரப் பிரிவு, மாநகராட்சி பிரதான அலுவலகம் (டவுன் ஹால்), கோயம்புத்தூர் மாநகராட்சி, 1109, பெரிய கடை வீதி, கோயம்புத்தூர் - 641001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.04.2025