நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Junior Overman

காலியிடங்களின் எண்ணிக்கை : 69

கல்வித் தகுதி :

Diploma in Mining or Mining engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம் :

ஆண்டுக்கு ரூ. 8.53 லட்சம் 

Mining Sirdar

காலியிடங்களின் எண்ணிக்கை : 102

கல்வித் தகுதி :

Diploma or Degree in any subject other than Mining Engineering or Diploma in Mining or Mining engineering படித்திருக்க வேண்டும். 

சம்பளம் :

ஆண்டுக்கு ரூ. 7.16 லட்சம்

வயது தகுதி :

30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இருப்பினும் மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். 

விண்ணப்பிக்க கட்டணம் :

  • ஓவர் மேன் பணியிடங்களுக்கு ரூ. 595, எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 295
  • மைனிங் சிர்தர் பணியிடங்களுக்கு ரூ. 486, எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 236

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.05.2025