நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவ கல்லூரியில் உதவியாளர் பணியிடங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.


Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் Bachelor’s degree in life sciences, (Biotechnology (B.Tech/ B.Sc) Molecular Biology/ Micro Biology/ Biochemistry படித்திருக்க வேண்டும். 

சம்பளம் :

ரூ. 31,000 (NET தேர்வில் தகுதி பெற்றிருந்தால்), ரூ. 25,000 + HRA (NET தேர்வு தகுதி இல்லையென்றால்)

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1743678327.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Professor and head, Department of veterinary gynecology and Obstetrics, Veterinary College and Research Institute, Namakkal – 637 002

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.04.2025