சென்னை ஐ.ஐ.டியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தின் (ஐ.ஐ.டி – IIT Madras) தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சி அலுவலகத்தில் இளநிலை நிர்வாகி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 10 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Junior Executive
காலியிடங்களின் எண்ணிக்கை : 10
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் 3 Year UG Degree (Arts & Science) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 18,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.04.2025