தமிழ்நாடு அரசின் மீன்வள பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு டாக்டர் ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழத்தின் கீழ் செயல்படும் தூத்துக்குடி, நாகப்பட்டினம் மற்றும் திருவள்ளூரில் உள்ள மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Senior Research Fellow
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology), M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 35,000
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 5
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் M.F.Sc. (Fisheries Resource Management / Aquatic Environment Management / Fish Physiology & Biochemistry / Fish Biotechnology), M.Sc. (Marine Biology / Zoology / Biotechnology / Life Sciences) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,000
Field Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் B.F.Sc. / B.Sc. (Zoology / Biotechnology / Life Sciences) படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
தேர்வு செய்யப்படும் முறை :
மேற்கண்ட பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் மட்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி : tanii202526@gmail.com
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.04.2025