நீலகிரி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் மாவட்ட நலசங்கத்தின் கீழ் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
மருத்துவ அலுவலர்
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் MBBS படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 60,000
மாவட்ட பொது மற்றும் தனியார் கலப்பு ஒருங்கிணைப்பாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் முதுநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஓராண்டு பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 26,500
முதுநிலை சிகிச்சை ஆய்வக மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மற்றும் Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ. 19,800
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor’s Degree OR Recognized sanitary inspector’s course படித்திருக்க வேண்டும். மேலும் கணினி இயக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,800
ஆய்வக நுட்புநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
ஓட்டுநர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,500
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://nilgiris.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்) அலுவலகம், மாவட்ட காசநோய் மையம், ஜெயில் ஹில் ரோடு, அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகம், உதகமண்டலம் - 643001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.04.2025