திருச்சி என்.ஐ.டியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) விடுதி காப்பாளர், விடுதி மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


Matron (Female) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Masters degree in Sociology or Psychology or Social Works or public Administration படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.

Hostel Manager (Male)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.

Hostel Assistant Manager (Male) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 6

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : 

இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம், அரசு விதிகளின்படி, பணியிடங்களுக்கு ஏற்ப வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://www.nitt.edu/home/other/jobs/Hostel_Advertisement_TempPost.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

The Chief Warden, Hostel Office, NIT Tiruchirappalli- 620015

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.04.2025