அண்ணா பல்கலைக்கழகத்தில் மேலாளர், நிர்வாகி பணியிடங்கள் அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் தொழில்முனைவோர் மேம்பாட்டு மையத்தில் திட்ட ஒருங்கிணைப்பாளர், மேலாளர், நிர்வாகி உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 

Startup Ecosystem Strategy Officer (Project Scientist)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

M.E./ M.Tech. படித்திருக்க வேண்டும். மேலும் 10 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 60,000

Program Coordinator (Project Associate I)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் B.E./ B.Tech. / M.Sc./ M.C.A./ M.B.A./ M.Com படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 35,000

Startup Analyst / Manager (Project Associate II)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

M.E./ M.Tech. படித்திருக்க வேண்டும். மேலும் 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 60,000

Accounts Executive (Project Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 

விண்ணப்பதாரர்கள் B.B.A. / B.Com படித்திருக்க வேண்டும். மேலும் 6 மாதங்கள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 20,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://www.auced.com/recruitment/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Director, Centre for Entrepreneurship Development, #302, Platinum Jubilee Building, 2nd Floor, AC Tech campus, Anna University, Chennai - 600025

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2025