அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவியாளர் பணி வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி எனப்படும் எம்.ஐ.டி கேம்பஸில் உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

Peon

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ஒரு நாளைக்கு ரூ. 499

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.annauniv.edu/pdf/CEW-14.03.2025.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Director, Centre for Empowerment of Women, Anna University, Chennai - 600025 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.03.2025