மத்திய காவல் துறையில் 1161 காலி பணியிடங்கள் அறிவிப்பு
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவலர்/ டிரேட்ஸ்மேன் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது..
மத்திய தொழிற்சாலை பாதுகாப்பு படையில் காவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 1161 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
CONSTABLE / TRADESMEN
காலியிடங்களின் எண்ணிக்கை : 1161
கல்வித் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயதுத் தகுதி :
01.08.2025 அன்று 18 வயது முதல் 23 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 21,700- 69,100
வயது வரம்பு தளர்வு :
எஸ்.சி/ எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு, திறனறி தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://cisfrectt.cisf.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.04.2025
விண்ணப்பக் கட்டணம் :
ரூ. 100. ஆனால் பெண்கள், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவினர் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.