ஐ.டி.பி.ஐ வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

ஐ.டி.பி.ஐ வங்கியில் 650 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.


கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

01.03.2025 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.

சம்பளம் :

ஆண்டுக்கு ரூ 6.14 – 6.50 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை : 

அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள், கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள், ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள், பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என 200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்  https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

எஸ்.சி / எஸ்.டி / மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ. 250, மற்றவர்களுக்கு ரூ. 1050

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2025