இன்று முதல் வெளுக்கப்போகும் கனமழை... 7 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தெற்கு மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது.