தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் (TANUVAS) கீழ் செயல்படும் செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருத்துவத்தூரில் உள்ள பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தொழில்நுட்ப உதவியாளர் மற்றும் கள உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Field Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 15,000
Technical Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
B.Sc/ M.Sc/ M.phil in Microbiology, Biochemistry/ Bio-technology/ life science படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 21,000
வயதுத் தகுதி :
35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓ.பி.சி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/admin/uploads/vacancies/1739183413.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
முகவரி :
Veterinary University Training and Research Centre, G.B. Complex, Melmaruvathur, Chengalpattu Dt- 603 319.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 26.02.2025