செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

செங்கல்பட்டு மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மிஷன் சக்தி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் உதவியாளர், காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


Center Administrator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Masters in Law/ Social Work/ Sociology/Social Science/Psychology படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 35,000

Psycho – Social Counsellor 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு மற்றும் Diploma in psychology / psychiatry / neurosciences  படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 22,000

Case Worker 

காலியிடங்களின் எண்ணிக்கை : 7

கல்வித் தகுதி :

Bachelor in Law/ Social Work/Sociology/Social science/ Psychology படித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

Office Assistant with Computer Knowledge

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினியில் டிப்ளமோ படிப்புடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 20,000

Multi-Purpose Staff / Cook

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி :

எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

Security Guard / Night Guard 

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர்களுக்கு 2 வருட பணி அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://chengalpattu.nic.in/notice_category/recruitment/  என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

மாவட்ட சமூக நல அலுவலகம், அறை எண்:4-02, 4வது தளம், B பிளாக், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், செங்கல்பட்டு - 603111 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 14.02.2025