ரயில்வே துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

RRB Group D 2025 : 

இந்திய ரயில்வேயில் குரூப் டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் மொத்தம் 32,438 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் சென்னை மண்டலத்தில் 2694 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


Group D 

காலியிடங்களின் எண்ணிக்கை : 32,438

கல்வித் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

இந்தப் பணியிடங்களுக்கு 01.07.2025 அன்று 18 வயது முதல் 36 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. 

சம்பளம் : ரூ. 18000 (அடிப்படை சம்பளம்)

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வில் தகுதி பெற்றவர்களுக்கு உடற்தகுதி தேர்வு நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.rrbchennai.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 22.02.2025

விண்ணப்பக் கட்டணம் :

ரூ. 500. இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு ரூ. 250