சென்னை ஐ.ஐ.டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) உள்ள தொழில்துறை ஆலோசனை மற்றும் ஸ்பான்சர் செய்யப்பட்ட ஆராய்ச்சி அலுவலகத்தில் இன்ஜினியர் பணியிடத்தை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.


Server Engineer 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 

சம்பந்தப்பட்ட பிரிவில் Bachelor’s or master’s degree in engineering படித்திருக்க வேண்டும். VMware, vSphere, ESXi, vCenter Configuration, Operation, and Troubleshooting Windows and Linux Operating Systems ஆகியவற்றில் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 8 – 10 லட்சம் (ஆண்டுக்கு)

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள்  https://careers.icsr.in/about.php என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.02.2025