இனி வெயிலை பற்றிய கவலை வேண்டாம்.... இந்த பாக்கெட் ஏசி போதும்!
கோடையில் வெளியில் செல்லும்போது பாக்கெட்டில் வைத்து செல்லக்கூடிய வகையிலான சிறிய வகை குளிர்சாதனத்தை சோனி நிறுவனம் தயாரித்துள்ளது.
கோடைக்காலத்தில் வெளியில் அலைபவர்களின் நிலைமையை சொல்லவும் வேண்டியதில்லை. அத்தகையவர்களின் மனதையும், உடலையும் குளிர்விப்பதற்காக, பாக்கெட் அளவில் ஏசியை தயாரித்து சந்தைப்படுத்தியுள்ளது சோனி நிறுவனம்.
கடந்த 2019ஆம் ஆண்டு ரியான் பாக்கெட் என்ற பெயரில் சிறிய செல்போன் வடிவிலான ஏசியை தயாரித்து சந்தைப்படுத்திய சோனி நிறுவனம், தற்போது அடுத்தடுத்த வெர்ஷன்களை வெளியிட்டு வருகிறது. அதன்படி, தற்போது Reon Pocket 5 என்ற பெயரில் புதிய வெர்ஷனை வெளியிட்டுள்ளது.
பழைய வெர்ஷன்களுடன் ஒப்பிடுகையில், இரட்டை சென்சார்களுடன் குளிரூட்டும் திறன்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளதாகவும், கோடையில் தினசரி பயன்பாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் சோனி நிறுவனம் தெரிவித்துள்ளது.
