சமீபத்தைய போதை வஸ்து குறித்த விழிப்புணர்வு செய்தி

இது தான் 

கூல் லிப் 


இதில் "இனிப்பு மற்றும் மிண்ட் சுவையுடன் புகையிலை" தலையணை போல பைகளில் கிடைக்கிறது 


உதட்டுக்கும் தாடை எலும்புக்கும் இடையில் கீழ் உதட்டில் இந்த தலைகாணியை ஒதுக்கி வைத்துக் கொண்டால் 

கொஞ்ச நேரம் ஜிவ்வென்று இருக்கும். 

ஒரு சின்ன ஹை கிடைக்கிறது 


இந்த போதை வஸ்துக்கு பள்ளி செல்லும் வளர்இளம் பருவத்தினர் / டீன் ஏஜ் பருவத்தினர் பழக்க நோய்க்கு உள்ளாகி பிறகு அடிமைத்தனத்துக்கு உள்ளாகும் நிலை இருக்கிறது 


புகையிலை = நிகோடின் 

நிகோடின் ரத்தத்தில் கலக்கும் போது கிடைக்கும் போதை 


இதே புகையிலை இருக்கும் சிகரெட் / பீடா/ கணேஷ் போன்ற வேறு பல போதை வஸ்துக்களுக்கும் பழக்கம் உண்டாக்கி விடக்கூடும்


தமிழ்நாட்டில் அரசு சாரா தொண்டு நிறுவனம் மூன்று மாவட்டங்களில் நடத்திய கள ஆய்வில் ஆறு முதல் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவிகளிடையே 3021 பேரிடம் ஆய்வு செய்ததில் 

23% பேர் இந்த தலைகாணியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். 


நம் வீட்டில் கல்வி பயிலச் செல்லும் செல்வங்களின் புத்தகப்பைகளில் கால்சட்டை கை சட்டைகளின் பைகளில் இது போன்ற விசயங்கள் கிடைத்தால் இது வரை தாங்கள் சாக்லெட் என்று நினைத்திருக்கக் கூடும்


இனி இவற்றைப் பார்த்தால் 


கட்டாயம் நம் செல்வங்களுக்கு அன்பான அனுசரணையான கவுன்சிலிங் தேவை 


கண்டிப்பாக அடி உதை உதவாது. 

அது நம் மீது ஒவ்வாமையை மட்டுமே உருவாக்கும்.


உங்களின் குடும்ப நல மருத்துவரிடம்/ குழந்தைகள் நல மருத்துவரிடம்  

அழைத்துச் சென்று ஒரு சின்ன ஹெல்த் கவுன்சிலிங் கொடுக்கக் கூறுங்கள் - தேவைப்பட்டால் கட்டாயம் மன நல மருத்துவரின் அறிவுரை மற்றும் கவுன்சிலிங்குக்கு பரிந்துரைக்கப்படும்


அன்பினால் ஆகாதது எதுவுமில்லை


நம்மை சுற்றி இருப்பதை கிடைப்பதை நாம் முதலில் அறிந்து வைத்திருக்க வேண்டும் 


இதை தடை செய்வது குறித்தும் அரசு முடிவெடுப்பது நல்லது 


பள்ளிகளில் கல்லூரிகளில் போதைப் பொருட்கள் மற்றும் நன்னடத்தை பற்றிய கருத்தரங்குகள் தொடர்ந்து நடைபெறுவது பலனைத் தரக்கூடும். 


நன்றி 


Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா 

பொது நல மருத்துவர் 

சிவகங்கை