சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு


சென்னை  மெட்ரோ ரயில் நிறுவனத்தில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


Manager (VAC & TVS)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

B.E / B.Tech (Mech / EEE) படித்திருக்க வேண்டும். மற்றும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி :

38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 85,000

Assistant Manager – (HR)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

Graduate in Science/ Commerce/ Arts/ Humanities மற்றும் MBA (HR) படித்திருக்க வேண்டும். மற்றும் 2 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.

வயதுத் தகுதி :

30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 62,000

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.02.2025

விண்ணப்பக்க கட்டணம் :

ரூ 300. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 50