பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் வேலை வாய்ப்பு
பெரம்பலூர் மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் இளம் வல்லுநர் பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடம் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Young Professional
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor of Engineering in Computer Science/ Information Technology. (or) Bachelor's Degree in Data Science and Statistics (or) Master's Degree in Computer Science, Information Technology, Data Science, Statistics படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 50,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2025/01/2025012149.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
புள்ளி இயல் துணை இயக்குனர், மாவட்ட புள்ளியியல் அலுவலகம், சார் ஆட்சியர் அலுவலக வளாகம், பழைய பேருந்து நிலையம் அருகில், பெரம்பலூர் - 621212
விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.01.2025