இந்திய கடலோர காவல் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு
இந்திய கடலோர காவல் படையில் Navik பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

Navik(GD)
காலியிடங்களின் எண்ணிக்கை : 260
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Navik(DB)
காலியிடங்களின் எண்ணிக்கை : 40
கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.
சம்பளம் :
அடிப்படை சம்பளம் ரூ 21,700
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி மற்றும் இ.டபுள்யூ.எஸ் பிரிவினருக்கு ரூ.300 ஆக உள்ளது. எஸ்.சி/ எஸ்.டி பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.02.2025