மத்திய ஆயுதப்படையில் 506 உதவி கமாண்டன்ட் பதவி

மத்திய ஆயுதப்படையில் காலியாக உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு (CENTRAL ARMED POLICE FORCES (ASSISTANT COMMANDANTS) அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF), எல்லை பாதுகாப்புப் படை (BSF), இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை, மத்திய தொழிலக காவல் படை (CISF), சிறப்பு சேவை பணியகம் (SSB ) ஆகிய ஆயுத காவல்படைகளில் உள்ள உதவி கமாண்டன்ட் பதவிகளுக்கான தேர்வை யுபிஎஸ்சி நடத்தி வருகிறது. அதன்படி, 2024 ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்: 506

எல்லை பாதுகாப்பு படை (Border security Force): 186

மத்திய ரிசர்வ் காவல்படை (CRPF) : 120

மத்திய தொழிலக காவல் படை (CISF) : 100

சிறப்பு சேவை பணியகம் (SSB) : 42

இந்தோ - திபெத்திய எல்லைக் காவல்படை (ITBF) : 58

முக்கியமான நாட்கள்:

ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள் : 24/04/2024

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கவேண்டிய கடைசி நாள் : 14/05/2024, மாலை 6 மணி

எழுத்துத் தேர்வு: 2024 ஆகஸ்ட் 4ம் தேதி

வயது வரம்பு: 01/08/2024 அன்றுள்ளபடி, குறைந்தபட்ச வயது வரம்பு 20 ஆக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2/08/1999 க்குப் பின்பு பிறந்தவர்களும், 1/08/2004-க்கு முன்பு பிறந்தவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார்கள்.

பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் மூன்று ஆண்டுகள் வரை வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும். முன்னாள்இராணுவத்தினருக்கு, மத்திய அரசுப் பணியாளர்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பில் இருந்து அதிகபட்சமாக ஐந்து ஆண்டிகள் வரை வயது வரம்பு சலுகை உண்டு.

கல்வித் தகுதி: பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.