திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
திருச்சி மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
Special Educator for Behavior Therapy
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor’s Degree in special education in intellectual disability படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : 23,000
Occupational Therapists
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor’s Degree in Occupational Therapy படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,000
Social Worker
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் Master of Social Work படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 23,800
வயதுத் தகுதி :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://cdn.s3waas.gov.in/s3f73b76ce8949fe29bf2a537cfa420e8f/uploads/2025/01/2025010978.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
முதல்வர், மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி, திருச்சிராப்பள்ளி
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.01.2025