பெல் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
தமிழகத்தில், திருச்சி மற்றும் ராணிப்பேட்டையில் அமைந்துள்ள பெல் (BHEL) நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு

இந்திய பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல் லிமிடெட் (Bharat Heavy Electricals Limited), இன்ஜினியர் டிரெய்னி மற்றும் சூப்பர்வைசர் டிரெய்னி பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 400 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Engineer Trainee
காலியிடங்களின் எண்ணிக்கை : 150
- Mechanical – 70
- Electrical – 25
- Civil – 25
- Electronics – 20
- Chemical – 5
- Metallurgy – 5
கல்வி தகுதி :
Bachelor’s Degree in Engineering /Technology or Five-year integrated Master’s degree or Dual Degree programme in Engineering or Technology in the disciplines of Mechanical or Electrical or Civil or Electronics or Chemical or Metallurgy Engineering படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி :
01.02.2025 அன்று 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்கள் 29 வயது வரை விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 12 லட்சம்
Supervisor Trainee
காலியிடங்களின் எண்ணிக்கை : 250
- Mechanical – 140
- Electrical – 55
- Civil – 35
- Electronics – 20
கல்வி தகுதி :
Diploma in Engineering in the disciplines of Mechanical or Electrical or Civil or Electronics படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி :
01.02.2025 அன்று 27 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் குறிப்பிட்ட பிரிவினருக்கு தளர்வு உண்டு.
சம்பளம் :
ஆண்டுக்கு ரூ. 7.5 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://careers.bhel.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
பொதுப் பிரிவு, இ.டபுள்யூ.எஸ், ஓ.பி.சி பிரிவுகளுக்கு ரூ. 1072, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி மற்றும் முன்னாள் ராணுவத்தினர் பிரிவுகளுக்கு ரூ. 472
விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2025