ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா... இ- பாஸ் முக்கியம்

கோடை வெயில் தாங்காமல் ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இ- பாஸ் நடைமுறையை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


சர்வதேச சுற்றுலா தளமாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை வெயிலின் அதிகமாக இருப்பதாலும் மற்றும் பள்ளி விடுமுறைகள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.

இந்நிலையில், அதிகளவில் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் கூட வாகனங்கள் செல்ல முடியாமல் திணரும் நிலை உருவாகி உள்ளது.


இதனால் இ - பாஸ் முறையை நடைமுறைபடுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த இ-பாஸ் முறை மே 7-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறை படுத்தப்படுகிறது.

இதில், இ-பாஸ் உள்ள வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்றும், உள்ளூர் பொதுமக்களுக்கு விலக்களிக்க வேண்டும் என்றும், இ-பாஸ் நடைமுறை குறித்து இந்திய அளவில் விரிவான விளம்பரங்களை அளிக்கவும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.