சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
Additional General Manager / Joint General Manager (Legal)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Graduate in Law (B.L / LLB) படித்திருக்க வேண்டும். மற்றும் 15 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி :
47 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,60,000
Joint General Manager / Deputy General Manager (Architect)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
B.Arch படித்திருக்க வேண்டும். மேலும் 13 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி :
40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 1,25,000 – 1,45,000
Manager (Design)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
B.E / B.Tech (Civil) படித்திருக்க வேண்டும். மேலும் 7 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
வயதுத் தகுதி :
38 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : ரூ. 85,000
வயது வரம்பு தளர்வு :
விதிமுறைகளின்படி வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவ தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://careers.chennaimetrorail.org/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.01.2025
விண்ணப்பக்க கட்டணம் :
ரூ 300. எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 50