ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

இந்தியாவின் முக்கிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஹெச்.டி.எஃப்.சி வங்கியில் ரிலேசன்ஷிப் மேனேஜர் பணியிடங்களை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ரிலேசன்ஷிப் மேனேஜர் என்பது, உதவி மேலாளர் அல்லது துணை மேலாளர் அல்லது மேலாளர் தகுதியில் பணி நியமனம் செய்யப்படும். தகுதியுள்ளவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


Relationship Manager

காலியிடங்களின் எண்ணிக்கை :

இந்தப் பணியிடங்களுக்கான காலியிடங்களின் எண்ணிக்கை அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 1-10 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

07.02.2025 அன்று 35 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ஆண்டுக்கு ரூ. 3 - 12 லட்சம்

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். கணினி வழித் தேர்வு மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://ibpsonline.ibps.in/hdfcrmaug24/ என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 479

விண்ணப்பிக்க கடைசி தேதி : 07.02.2025