மே மாதத்தில் வங்கிகள் பாதி நாட்கள் செயல்படாது...

இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள விடுமுறை பட்டியலின்படி, இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் இந்த மாதம் ஒரு சில நாட்கள் வங்கிகள் இயங்காது என்ற தகவல் கிடைத்துள்ளது. வங்கிகள் மூடப்பட்டிருந்தாலும் ஆன்லைன் பேங்கிங் சேவைகள் வழக்கம் போல இயங்கும்.


ஒருவேளை அடுத்த மாதம் ஏதேனும் ஒரு வங்கிக் கிளைக்கு நேரடியாக சென்று முக்கியமான வேலைகளை முடித்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் திட்டமிட்டு உள்ளீர்கள் என்றால் மே 2024 மாதத்தில் பல்வேறு நகரங்களில் உள்ள வங்கிகளுக்கான விடுமுறை பட்டியலை நீங்கள் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.

ஒரு சில வங்கி விடுமுறைகள் இந்தியா முழுவதும் அனுசரிக்கப்பட்டாலும் ஒரு சிலவை உள்ளூர் விடுமுறைகளாக உள்ளன. பண்டிகைகள் காரணமாக பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கி கிளைகள் இந்த மாதம் மூடப்பட்டிருக்கும்.

மே மாதத்தில் மட்டும் மொத்தமாக 15 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டு இருக்கும். இதில் 9 நாட்கள் இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ள விடுமுறை காலண்டர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மீதமுள்ளவை வார இறுதி நாட்களாகவும், மாநிலங்கள் அறிவித்த விடுமுறைகளாகவும் உள்ளன.

எனினும், அனைத்து மாநிலங்கள் அல்லது பகுதிகளிலும் வங்கிகள் 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும் என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டாம். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளின் மொத்த விடுமுறை நாட்களின் எண்ணிக்கை.

உதாரணமாக, மேற்கு வங்காளத்தில் ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாளை ஒட்டி வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஆனால் இந்த விடுமுறை கோவா, பீகார் அல்லது பிற மாநிலங்களுக்கு பொருந்தாது.


மே 2024 ஆம் மாதத்தில் வரவுள்ள வங்கி விடுமுறைகளின் பட்டியல் : 

மகாராஷ்டிரா தின்/மே தினம் (உழைப்பாளர் தினம்): மே 1

மக்களவைத் தேர்தல் 2024: மே 7

ரவீந்திரநாத் தாகூர் பிறந்த நாள்: மே 8

பாசாவா ஜெயந்தி/ அக்ஷய திருதியை: மே 10

மக்களவைத் தேர்தல் 2024: மே 13

மாநில நாள்: மே 16

மக்களவைத் தேர்தல் 2024: மே 20

புத்த பூர்ணிமா: மே 23

நஸ்ருல் ஜெயந்தி/மக்களவைத் தேர்தல் 2024: மே 25

வார இறுதிகள் மற்றும் இரண்டாவது சனிக்கிழமைகள்

மே 4: ஞாயிற்றுக்கிழமை

மே 11: இரண்டாவது சனிக்கிழமை

மே 12: ஞாயிற்றுக்கிழமை

மே 18: ஞாயிற்றுக்கிழமை

மே 25: நான்காவது சனிக்கிழமை

மே 26: ஞாயிற்றுக்கிழமை