புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் (Senior Treatment Supervisor (STS))
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Bachelor’s Degree OR Recognized Sanitary Inspector’s course, Certificate course in computer operation படித்திருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : 19,800
முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர் (Senior Tuberculosis Laboratory Supervisor (STLS))
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Graduate Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 19,800
ஆய்வக நுட்புனர் (Laboratory Technician)
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். மேலும் Diploma or certified course in medical Laboratory technology படித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2024/12/2024122342.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
மாவட்ட திட்ட அலுவலர் மற்றும் துணை இயக்குனர் (காசநோய்), மாவட்ட சுகாதார சங்கம், மாவட்ட காசநோய் மையம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், புதுக்கோட்டை - 622001
விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.01.2025