புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு

புதுக்கோட்டை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


மாவட்ட தர நிர்ணய ஆலோசகர் (District Quality Consultant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

பல் மருத்துவம், ஆயுஷ் மருத்துவம், விலங்கியல் பட்டம், செவிலியர் பட்டம் முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : 40,000

பல் மருத்துவ உதவியாளர் (Dental Assistant)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு முன் அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,800

இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP) 

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

Diploma in GNM / B.Sc Nursing படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

புதுக்கோட்டை மாவட்ட சுகாதார அலுவலகம், பழைய பேருந்து நிலையம் அருகில், நீதிமன்ற வளாகத்திற்கு எதிரில், மதுரை ரோடு, புதுக்கோட்டை - 622001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.