புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வேலை வாய்ப்பு ..
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 5 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
தர மேலாளர் (Quality Manager)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Masters in Hospital administration / Health Management / Master of Public Health படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பித்தார்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 60,000
கதிர்பட பதிவாளர் (Radiographer)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
B.Sc., Radiography படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,300
ஆரம்ப கால தலையீட்டாளர் மற்றும் சிறப்பு கல்வியாளர் (Early interventionist cum Special Educator)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
M.Sc., in Disability studies (Early Intervention) with basic degree in Physiotherapy (BPT) / Occupational therapy (BOT)/ Speech Language pathologist (ASLP) / MBBS / BAMS / BHMS (OR) 2. Post graduate Diploma in Early Intervention (PGDEI) with basic degree in physiotherapy (BPT) / Occupational therapy (BOT) / Speech Language pathologist (ASLP)/MBBS. (OR) 3. B.Ed., Special Education/ Bachelor in Rehabilitation Science/Bachelor in Mental Retardation படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,000
கணினி பகுப்பாயர் (System Analyst)
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
Masters in Disability rehabilitation administration (MDRA) in DPT (Bachelor in Physiotherapy), BOT (Bachelor of Occupational Therapy), BPO (Bachelor in Prosthetic and Orthotics), B.Sc., Nursing, 2. Post Graduate degree / Diploma in Hospital / Health Management, 3. MBA Degree படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 13,750
பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8,500
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி :
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலுவலகம், முள்ளூர், புதுக்கோட்டை மாவட்டம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 24.12.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் பல விவரங்கள் பற்றி அறிய https://pudukkottai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.