ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான தி ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப்ரேசன் ஆஃப் இந்தியாவில் (GIC) உதவி மேலாளர்/ அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 100 காலிப் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளது. 


OFFICERS

காலியிடங்களின் எண்ணிக்கை : 110

GENERAL – 18

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

LEGAL – 9

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in law பெற்றிருக்க வேண்டும்.

HR – 6

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் Post Graduation in HRM / Personnel Management படித்திருக்க வேண்டும்.

ENGINEERING – 5

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree (B.E/B.Tech) in Civil / Aeronautical / Marine / Mechanical / Electrical பெற்றிருக்க வேண்டும்.

IT – 22

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E/B.Tech in computer science/information technology/Electronics & Electrical/Electronics & Telecommunications/ Electronics & Communication பெற்றிருக்க வேண்டும்.

ACTUARY – 10

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

INSURANCE – 20

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

MEDICAL (MBBS) – 2

கல்வித் தகுதி :

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS படித்திருக்க வேண்டும். 

FINANCE – 18

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Com படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 

விண்ணப்பதாரர் 01.11.2024 அன்று 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி/ எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் : 45,000

தேர்வு செய்யப்படும் முறை :

இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://www.gicre.in/en/people-resources/career-en என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.12.2024

விண்ணப்பக் கட்டணம் :

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் பல விவரங்கள் பற்றி  அறிய https://www.gicre.in/images/2024/Detailed_Advertisement_for_Recruitment_of_AMs_in_GIC_Re_2024_-_v3_-_Final.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.