தேசிய பாதுகாப்பு அகாடமியில் 406 காலியிடங்கள் அறிவிப்பு
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (UPSC) தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் கடற்படை அகாடமி (National Defence Academy & Naval Academy) தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 406 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தேசிய பாதுகாப்பு அகாடமி
காலியிடங்களின் எண்ணிக்கை – 370
காலியிட விவரம்
- Army – 208
- Navy – 42
- Air force – 120
தேசிய கடற்படை அகாடமி
காலியிடங்களின் எண்ணிக்கை – 36
கல்வித் தகுதி :
12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 17 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் :
ரூ 100. இருப்பினும் பெண்கள், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2024
இது தொடர்பாக மேலும் பல விவரங்கள் அறிய https://upsc.gov.in/sites/default/files/Notific-NDA-NA-I-2025-Engl-11122024.pdf என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பாணையை பார்வையிடவும்.