என்.எல்.சி. யில் வேலை வாய்ப்பு

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான அப்ரண்டிஸ் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 588 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 


Graduate Apprentice 

காலியிடங்களின் எண்ணிக்கை : 336

  • Mechanical Engineering - 84 
  • Electrical Engineering - 81 
  • Civil Engineering - 26 
  • Instrumentation Engineering - 12 
  • Chemical Engineering - 10 
  • Mining Engineering - 49 
  • Computer Science Engineering - 45 
  • Electronics & Communication Engineering - 4 
  • Nursing - 25 

கல்வித் தகுதி :

2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

உதவித் தொகை : ரூ. 15,028 (Nursing – 12,524)

Technician Apprentice 

காலியிடங்களின் எண்ணிக்கை : 252

  • Mechanical Engineering - 77 
  • Electrical Engineering - 73 
  • Civil Engineering - 19 
  • Instrumentation Engineering - 7
  • Mining Engineering - 30 
  • Computer Science Engineering - 18 
  • Electronics & Communication Engineering - 8 
  • Nursing - 20

கல்வித் தகுதி :

2020/ 2021/ 2022/ 2023/ 2024 ஆம் ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

உதவித் தொகை : ரூ. 12,524 

வயது தகுதி : 

18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை : 

சம்பந்தப்பட்ட கல்வி தகுதிகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி :

Office of The General Manager, Learning and Development Centre, Block-20, NLC India Limited. Neyveli – 607803.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.12.2024

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Advt.4-2024_Details.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.