மின்தடையை முன்னதாக தெரிந்து கொள்வது எப்படி?

உங்களது மாவட்டத்தில் , உங்களது ஊரில் எங்கு , எப்பொழுது , எவ்வளவு நேரம் பராமரிப்பிற்காக  மின்தடை ஏற்படும் என்பதை நீங்கள் முன்கூட்டியே அறிந்து கொள்ள நமது தமிழக அரசின் மின்வாரிய இணையதளத்தில் தெரிந்து கொள்ள முடியும் .

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பராமரிப்பு பணிகள் நடக்கும்போது காலை 9 மணியில் துவங்கி மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் . இதைப்பற்றி மின்சாரவாரியம் சார்பில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்படுகிறது.











மின்சார வாரிய இணையதளத்தில் சென்று உங்கள் பகுதியை தேர்வு செய்து பராமரிப்பு பணி காரணமாக உங்கள் பகுதியில் மின்தடை செய்ய திட்டமிட்டுள்ளார்களா எனவும் , ஆம் எனில் மின்தடை ஏற்படும் நாள் எது எனவும் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் . திடீரென ஏற்படும் மின்வெட்டு குறித்து எந்த தகவலும் இந்த இணையதளத்தில்  அறிந்து கொள்ள முடியாது.

மின்சார வாரிய இணையதளத்தின் லிங்க்  கீழே கொடுக்கப்பட்டுள்ளது . https://www.tnebltd.gov.in/outages/viewshutdown.xhtml