இந்தியன் ஆயில் நிறுவனத்தில் வேலை
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்ரேஷனில் அப்ரண்டிஸ் பயிற்சி இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
Diploma (Technician) Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை : 120
- Mechanical Engineering - 20
- Civil Engineering - 20
- Electrical Engineering - 20
- Electrical and Electronics Engineering - 20
- Electronics and Instrumentation Engineering / Electronics - 20
- Instrumentation and Control Engineering / Instrumentation - 20
கல்வி தகுதி :
சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை : 10,500
Non-Engineering Graduate Apprentices
காலியிடங்களின் எண்ணிக்கை : 120
கல்வி தகுதி :
விண்ணப்பதாரர்கள் BA., / B.Sc., / B.Com., / BBA / BCA / BBM படித்திருக்க வேண்டும்.
உதவித்தொகை : 11,500
வயது தகுதி :
18 வயது முதல் 24 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி எஸ்.சி/ எஸ்.டி/ ஓ.பி.சி/ மாற்றுத் திறனாளி பிரிவுகளுக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பயிற்சி பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட கல்வித் தகுதியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதே இணையதளப் பக்கத்தில் INDIAN OIL CORPORATION LIMITED என தேடல் செய்து அந்த இணைப்பில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 29.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2024/11/Indian_Oil_Corporation_Ltd.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.