ஒருவேளை உங்களுடைய ஆதார் எண்ணை நீங்கள் தொலைத்திருந்தாலோ அல்லது மறந்துவிட்டாலோ அதனை அதிகாரப்பூர்வ UIDAI வெப்சைட்டில் இருந்து மீட்டெடுத்துக் கொள்ளலாம்.
ஆதார் என்ற 12 இலக்க தனித்துவ அடையாள எண் என்பது யுனிக் ஐடென்டிஃபிகேஷன் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா(UIDAI) ஒவ்வொரு இந்திய குடிமக்களுக்கும் வழங்கக்கூடிய ஒரு எண்ணாகும். இதனை பல்வேறு காரணங்களுக்காக நீங்கள் ஒரு டிஜிட்டல் ஐடி கார்டு போல பயன்படுத்திக் கொள்ளலாம். ஒவ்வொரு தனி நபருக்கும் ஒரு தனித்துவமான ஆதார் எண் கொடுக்கப்படுகிறது. ஆதார் என்பது ஒருவரின் கைரேகைகள், கருவிழி ரேகைகள் போன்ற பயோமெட்ரிக் தகவல்கள் மற்றும் பெயர், முகவரி போன்ற விவரங்களை கொண்டிருக்கும்.
இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொள்ளும் பொழுது, ஆதார் எண்ணை தவறவிடுவது அல்லது மறப்பது ஒரு நபருக்கு அழுத்தத்தை கொடுக்கலாம். எனினும் இந்த சூழ்நிலையை உங்களால் சமாளிக்க முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்வரும் லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லவும் https://myaadhaar.uidai.gov.in/retrieve-eid-uid
உங்களுடைய தேவையை தேர்வு செய்யுங்கள் - நீங்கள் மீட்டெடுக்க விரும்புவது ஆதார்/EID என்பதை தேர்வு செய்யவும்.