தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் வேலை வாய்ப்பு

தஞ்சாவூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள மேற்பார்வையாளர், ஆய்வக நுட்புனர், சுகாதார பார்வையாளர் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


முதுநிலை காசநோய் ஆய்வக மேற்பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Graduate or Diploma in Medical Laboratory technology படித்திருக்க வேண்டும். 

சம்பளம் : ரூ. 19,800

ஆய்வக நுட்புநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Diploma or certified course in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,000

காசநோய் சுகாதார பார்வையாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளநிலை அறிவியல் அல்லது 12 ஆம் வகுப்பில் அறிவியல் பாடங்கள் படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுகாதாரப் பணியாளராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 13,300

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2024/11/2024110838.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : துணை இயக்குநர் மருத்துவ பணிகள் (காசநோய்), மாவட்ட காசநோய் மையம், இராசா மிராசுதாரர் மருத்துவமனை வளாகம், தஞ்சாவூர் - 613001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.11.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2024/11/2024110838.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.