கோவை ஜவுளி மேலாண்மை கல்லூரியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நிர்வாகி, உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 7 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. 


Assistant professor in Business Analytics

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி :

M.Sc. / M.E./ MCA / MBA படித்திருக்க வேண்டும். 

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர்கள் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 38,500 - 52,250

Administrative Officer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் :

ரூ. 20,000 – 50,000

Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

Junior Engineer 

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் Bachelor Degree in Civil Engineering OR Diploma in Civil Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2-4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

Electrical Supervisor

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Bachelor Degree in electrical Engineering OR Diploma in Electrical Engineering படித்திருக்க வேண்டும். மேலும் 2-4 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

Assistant Warden (Women)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பிக்கும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://svpistm.ac.in/admin/AppCode/Upload/announcement/58SVPISTM%20recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும். 

முகவரி :

The Director, SVPISTM, No.1483, Avinashi Road, Peelamedu, Coimbatore – 641004

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.11.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://svpistm.ac.in/admin/AppCode/Upload/announcement/58SVPISTM%20recruitment.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.