கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையில் வேலை வாய்ப்பு

கோயம்புத்தூர் மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர், பாதுகாவலர் மற்றும் பன்முகப் பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

 

வழக்குப் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

Master of social work(MSW),M.A/M.Sc Sociology, M.A/M.Sc Psychology / clinical Psychology படித்திருக்க வேண்டும். ஒரு வருட பணி அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,000

பாதுகாவலர்

                                                             : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

விண்ணப்பதாரர் 21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

பன்முகப் பணியாளர்

கல்வித் தகுதி :

8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஒரு வருட முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி :

21 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/11/2024110428.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

District Social Welfare Officer, District Collectorate Campus, Old building,Ground floor, Coimbatore 641018.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.11.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3d9fc5b73a8d78fad3d6dffe419384e70/uploads/2024/11/2024110418.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.