சென்னை ஐ.ஐ.டி யில் இன்ஜினீயர் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு . .
சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) சாஃப்ட்வேர் டெவலப்பர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

Software Developer
காலியிடங்களின் எண்ணிக்கை : 3
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் Postgraduate / B. E / B. Tech / MCA/ M.Sc - (Com. Sci.) படித்திருக்க வேண்டும். மேலும் 2-3 வருடங்கள் பணி அனுபவம் வேண்டும்.
சம்பளம் : ரூ. 25,000 – 35,000
தேர்வு செய்யப்படும் முறை :
இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் பற்றி அறிய https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.