தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு
தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தில் (TANCEM) உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

Mazdoor
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர் 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.
வயது தகுதி :
விண்ணப்பிக்க விரும்புவோர் 18 வயது முதல் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 8085-80-9685
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://www.tancem.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
முகவரி :
The Senior Manager (P&A)/ Dy. Collector, M/s Tamilnadu cements corporation limited, 5th Floor, Aavin Illam, No.3A, Pasumpon Muthuramalingam Salai, Nandanam, Chennai - 600035
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.11.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள https://www.tancem.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.