கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத் துறையில் வேலை வாய்ப்பு..

கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு பாதுகாப்பு அலுவலர் மற்றும் புறத்தொடர்பு பணியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. 


புறத்தொடர்பு பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

விண்ணப்பதாரர் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 10,592

பாதுகாப்பு அலுவலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி :

சமூகப்பணி/ சமூகவியல்/ குழந்தைகள் வளர்ச்சி/ மனித உரிமைகள் பொது நிர்வாகம்/ உளவியல்/ மனநலம்/ சட்டம்/ பொது சுகாதாரம்/ சமுதாய வள மேலாண்மை படிப்புகளில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 27,804

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 3-வது தளம், இணைப்பு கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் - 629001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் பற்றி அறிய https://kanniyakumari.nic.in/ என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.