சென்னை குடிநீர் வடிகால் வாரியத்தில் வேலை அறிவிப்பு; 108 காலி பணியிடங்கள்;..

சென்னை பெருநகர குடிநீர் வடிகால் வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 108 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.


Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை : 76

  • Civil Engineering / Mechanical Engineering – 52
  • Electrical and Electronics Engineering – 24

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் இன்ஜினியரிங் படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 9000

Technician (Diploma) Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை : 32

  • Civil Engineering – 10
  • Electrical and Electronics Engineering – 22

கல்வித் தகுதி :

விண்ணப்பிக்க விரும்புவோர் 2020, 2021, 2022, 2023 மற்றும் 2024 ஆண்டுகளில் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : 8000

தேர்வு செய்யப்படும் முறை : 

இந்தப் பணியிடங்களுக்கு டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nats.education.gov.in என்ற இணையதளப் பக்கத்தில் பதிவு செய்து, பின்னர் CHENNAI METROPOLITAN WATER SUPPLY AND SEWERAGE BOARD என்ற இணைப்பில் சென்று விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.10.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள என்ற http://boat-srp.com/wp-content/uploads/2024/10/CMWSSBNotification_2024_25.pdf இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.