தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு ..
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

Skilled Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை : 1
கல்வித் தகுதி :
விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு அல்லது டிகிரி படித்திருக்க வேண்டும். மேலும் 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 12,240
தேர்வு செய்யப்படும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்குக் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் தேர்வில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
முகவரி :
Department of Veterinary Parasitology, Madras Veterinary College, Chennai – 600007
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 18.10.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tanuvas.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.